தமிழகத்தில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை:

மிழகத்தில் மேலும் 2 நாட்கள்  மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை போன்ற  மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மேலும் 2 தினங்களுக்கு மழை  தொடருமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாகவும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாகவும்,  குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடருமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.