4-ந்தேதி முதல் மீண்டும் மழை: இந்திய வானிலை மையம் தகவல்

டில்லி:

மிழகத்தில் வருகிற 4-ந்தேதி முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப் பகுதியில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்  டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தெற்கு அந்தமான் கடல்  பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இந்த காற்றத்தழுத்ததாழ்வு 3-ந்தேதி தென் மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை வரை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 4ந்தேதி முதல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அப்போது மழையின் அளவு  11 செ.மீ. அளவுக்கும் இன்றும்,  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிலக்குமா என்பது குறித்து வானிலை அதிகாரிகள் கணித்து வருகிறார்கள். அதன் பிறகே மழை குறித்து இறுதி எச்சரிக்கை விடப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.