தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்.

சென்னை:

மிழகத்தில் கோயம்புத்தூர், தேனி உள்பட  8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக  மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் , வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரண மாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றம் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும். என்றும், தெரிவித்துள்ளார்.