தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது,  வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,  வளிமண்டல மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சல னம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குறிப்பிடக்கூடிய அளவில் மழை பதிவாகவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.