தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை,

மிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு  என்றும், சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்ல என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது. அதேபோல் கேரளாவில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 24ந்தேதியோடு அக்னி நட்சத்திரம் முடிவடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.