29ந்தேதி முதல் தமிழகத்தில் மழை…. வானிலை மையம் குளிர்ச்சியான தகவல்

சென்னை:

மிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,  இன்னும் 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான சூழல் உருவாகி வருவதாகவும், 29ந்தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் குளிர்ச்சியான தகவலை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில்  கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வரும் நிலையில், ,இந்திய பெருங்கடல் – தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக  ஒருசில நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த  குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக  நாளை முதல் தென்மேற்கு வங்ககடல் பகுதி, இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதி இந்த கடற்பகுதிகளில் 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச கூடும், வரும் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதி இதே காற்று, 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து, தென்தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், வரும்  29ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்தாகவும் தெரிவித்து உள்ளது.

You may have missed