சென்னை

மிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோடைக்காலம் தமிழகத்தை வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது.  மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துப் பல இடங்களில் பகல் வேளைகளில் அனல்காற்று வீசி வருகிறது.  இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.