காற்றழுத்த தாழ்வால் தொடரும் மழை: புதுச்சேரியில் கடல் சீற்றம்

புதுச்சேரி:

ங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றதழுத்த தாழ்வு நிலை சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடல் சீற்றம் காரணமாக கடற்பகுதிகளில் வசித்து வரும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததாகவும், சுமார்  50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பொம்மையார் பாளையம் மீனவர் கிராமத்தில் 10 வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன. கன மழை காரணமாகவும் கடல் சீற்றத்தாலும் 10 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. கடல் சீற்றத்தின் பாதிப்பை குறைக்க தூண்டில் வளை வைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் கடலோர காவல்படையினர் விரைந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதுபோல புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது.   தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது