தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும்!

மிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

“தமிழகம் மற்றும் இலங்கை அருகே தென் மேற்கு வங்க கடல் பகுதியில்  வரும் மேலடுக்கு சுழற்சி மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தவிர இதனால் தொடர்ந்து அடுத்த 3 தினங்கள் தமிழகத்தில் பரவலாக மழைபெய்யும். பொதுவாக மிதமான மழை பெய்தாலும் சில சமயங்களில் கனத்த ழை பெய்யவும் வாய்ப்பு உண்டு.

தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி காற்றத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  அந்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழத்த தாழ்வு மண்டலமாக மாறும்.  பிறகு இது  புயலாக மாறி ஓமன் வழியே நகரகூடும்.

ஆகவே, மீனவர்கள் வரும் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவு, குமரி கடல் பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் .  ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பிட வேண்டும்: என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், “கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் குள்ளம்பாடி 11 செமீ மழையும், திருசெந்துர் 10செ மீ மழையும் பதிவாகி இருக்கிறது” என்று தெரிவித்தார்.