பாராளுமன்றத்தில் உரிமைக்குரல் எழுப்புங்கள்!: அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அறிவுரை

மிழக உரிமைகளுக்காக  நாடாளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்ப வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி.களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி தவங்க இருக்கிறது.  இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. எம்பிக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“கடந்த முறை காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுவினரின் செயல்பாடுகளால் நாடே நம்மை திரும்பிப்பார்த்தது அதே போல வரும் நாட்களிலும் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் அனைத்துத் தரப்பும் ஒத்துழைப்பு அளித்ததால் தமிழகத்திற்கு வெற்றி கிடைத்தது.   இந்த ;விவகாரத்தில் தேவையான நீதியை பெறுவதில் அதிமுக எம்பிக்களின் பங்கு மிகச்சிறப்பாக இருந்தது.

மேகதாதுவைப் போல, கஜா புயல் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

மேலும் தமிழகத்துக்கு அதிக நிதி தர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கஜா புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக  தகவல் வெளியாகி உள்ளது.

#Raising #voice #parliament #rights:#tamilnadu #cm #edapadipalaniswamy #advised- #admk #mps