ஃபேசியல் செய்ததில் நடிகை ரைஸாவிற்கு நடந்த விபரீதம்….!

தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் ஃபேசியல் செய்ய பார்லர் சென்றதாகவும் ,சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது வெளியூர் சென்றுவிட்டதாக கூறுவதாகவும் ரைஸா குற்றம்சாட்டியுள்ளார்.