நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹியூமா குரோஷி நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 30% முடிவுற்றுள்ளது.

மொத்தம் இந்தப் படத்தில் அஜித்துடன் 3 வில்லன்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் ஒருவராக நடிக்கத் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் .

ஹைதராபாத் மற்றும் சென்னையில் வலிமை படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடிகர் ராஜ் அய்யப்பா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் ஏற்கெனவே அதர்வா நடித்த ‘100’ என்ற படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதோடு, அஜித் உடன் அமராவதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பானு பிரகாஷின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.