பிரபல நடிகர் மனைவி மாரடைப்பால் மரணம்

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்கபூர் மனைவி கிருஷ்ணா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மும்பை படவுலகில் 4 தலைமுறைகளாக புகழ் பெற்றது ராஜ்கபூர் குடும்பம் ஆகும்.   இவர் தந்தை பிரிதிவி ராஜ் கபூர் மிகப் புகழ் பெற்ற நடிகர்.   ராஜ்கபூரின் தம்பிகளான ஷம்மி கபூர் மற்றும் சசி கபூரும் புகழ் பெற்ற நடிகர்கள் ஆவார்கள்.    ராஜ் கபூர் நடிகராக மட்டுமின்றி இயக்குனரராகவும் முத்திரை பதித்தவர் ஆவார்.

கடந்த 1988 ல் மரணமடைந்த ராஜ்கபூரின் மனைவி கிருஷ்ணா கபூர்.  இவர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.  இவருக்கு வயது 87 ஆகிறது.   இந்த தகவலை ராஜ்கபூரின் மூத்த மகன் ரந்தீர் கபூர் தெரிவித்துள்ளார்.

மறைந்த கிருஷ்ணா மற்றும் ராஜ்கபூர் தம்பதியினருக்கு ரந்தீர், ரிஷி மற்றும் ராஜிவ் என மூன்று மகன்கள் உள்ளனர்.  மூவரும் பாலிவுட்டின் புகழ்பெற்ற முன்னாள் கதாநாயகர்கள் ஆவார்கள்.   ரந்தீர் கபூரின் மகள்களான கரித்மா மற்றும் கரீனா ஆகியோரும் ரிஷி கபூரின் மகன் ரண்பீர் கபூரும் தற்போது பாலிவுட்டில் புகழ் பெற்று விளங்குகின்றனர்.