மும்பை

பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கு ராஜ் தாக்கரேவின் பேரணியால் பெரும் பின்னடைவு உண்டாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக – சிவசேனா ஒரு அணியிலும் காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் மற்றொரு அணியிலும் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. மகராஷ்டிரா நவநிர்மாண் கட்சியின் தலைவரும் முன்னாள் சிவசேனா தலைவர்களில் ஒருவருமான ராஜ் தாக்கரே தனது கட்சியின் சார்பில் யாரையும் களமிறக்கவில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பேரணிகளில் கலந்துக் கொள்கிறார்.

ராஜ் தாக்கரேவின் பேரணிகளுக்கு பெருமளவில் மக்கள் வரவேற்பு உள்ளது. அது மட்டுமின்றி பல தொலைக்காட்சி ஊடகங்களிலும் இவருடைய பேரணிகல் தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றன. அவர் தனது பேரணிகளில் பெரிய டிஜிட்டல் ஸ்கிரீன் மூஉலம் மோடி முதலில் ஜிஎஸ்டி மற்றும் ஆதார் குறித்து பேசியவற்றை தற்போது ஒளிபரப்பி வருகிறார். அதன் பிறகு தற்போது அவருடைய நடத்தை முந்தைய அவரது கருத்துக்களுக்கு எதிராக உள்ளதை குறித்து உரையாற்றுகிறார்.

அதனால் ராஜ் தாக்கரேவின் பேரணிகள்பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கு டலைவைலியை உண்டாக்கி இருக்கிறது. மூத்த பாஜக தலைவரும் கல்வி அமைச்சருமான வினோத் தாவ்டே தேர்தல் ஆணையத்திடம் ராஜ் தாக்கரேவின் பேரணி செலவுகள் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என மனு அளித்துள்ளார். அத்துடன் பாஜக மற்றும் சிவசேன பிரமுகர்கள் பலரும் ராஜ் தாக்கரேவுக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.