மோடி ஒரு பொய்யர் : ராஜ் தாக்கரே ஆவேசம்

மும்பை

மோடி என்னும் பொய்யரின் புல்லட் ரெயில் திட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது என மகாராஷ்டிரா நவ் நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறி உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பை எல்ஃபின்ஸ்டோன் ரோடு ரெயில் நிலை மேம்பாலத்தில் ஒரு வதந்தியால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  இதில் 23 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  பலர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  தற்போது மோடி அறிவித்துள்ள மும்பை ரெயில் திட்டத்துக்கு  மகராஷ்டிரா நவ் நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தனது கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

ராஜ் தாக்கரே, “மோடி ஒரு பொய்யர்.  மும்பையின் புறநகர் பிரச்னைகளை இன்று வரை அவர் தீர்த்து வைக்கவில்லை.   அவர் அதை தீர்த்து வைக்கும் வர மோடியின் புல்லட் ரெயில் திட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது.   இந்த திட்டத்துக்காக ஒரு செங்கல்லை எடுத்து வைக்கைக் கூட நான் அனுமதிக்கவே மாட்டேன்.   மும்பையிலுள்ள அடிப்படை பிரச்னைகளை தீருத்து வைத்துவிட்டு புல்லட் ரெயில் அமைக்கட்டும்.

அப்படி மோடிக்கு அவசியம் புல்லட் ரெயில் கொண்டு வரவேண்டும் என்றால் அவர் குஜராத்துக்குள்ளேயே தொடங்கி ஓட்டட்டும்.  இங்கு வேண்டாம்.  பதவியை பிடிக்க தேர்தலுக்காக மோடி பொய்க்கு மேல் பொய்களாக வாக்காளர்களிடம் கூறி உள்ளார்.  ஒரு மனிதரால் எப்படி இவ்வாறு எல்லாம் பொய் சொல்ல முடிகிறது?” எனக் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி