நாண்டெட், மகாராஷ்டீரா

மோடி ஏன் வேலை வாய்ப்புகள், பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னை குறித்து ஏன் பேசுவதில்லை என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மகாராஷ்ரா நவ நிர்மாண் சமிதி போட்டி இடப் போவதில்லை என அறிவித்துள்ளது.  ஆயினும் மாநிலம் எங்கும் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்த் வருகிறார்.   அவர் மகாராஷ்டிர மாநிலம் நாண்டேட் பகுதியில் ஒரு தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அப்போது ராஜ் தாக்கரே, “கடந்த நான்கரை வருடங்களாக பிரதமர் மோடி மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி வருகிறார்.   ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் அவர் தேவையற்ற விஷயங்களை பேசி வருகிறார்   மற்றும் முன்னாள் பிரதமர்களான பண்டிட் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியை விமர்சித்து வருகிறார்.

பிரதமர் மோடி தம்மை ‘பிரதான் சேவக்’ (முதன்மை ஊழியர்) என கூறிக் கொள்வது பண்டிட் நேருவின் வாசகம் ஆகும்.  ஒரு முறை நேரு தன்னை பிரதமர் என அழைப்பதை விட ’பிரதம் சேவக்’  (முதல் ஊழியர்) என அழைப்பதே பொருத்தம் என கூறியதை சற்றே மாற்றி முதன்மை ஊழியர் என தன்னை மோடி அழைத்துக் கொள்கிறார்.

இவ்வளவு தேவையற்ற விஷயங்களை பேசும் மோடி பல தேவையான விஷயங்கள் குறித்து ஏன் பேசுவதில்லை?   அவர் இதுவரை வேலை வாய்ப்பு இன்மை,  பெண்கள் பாதுகாப்பு,  விவசாயிகள் பிரச்னை குறித்து ஏன்பேசுவதே கிடையாது?   அது முதன்மை ஊழியர் பணிகளின் கீழே வராதா?

இந்திய ராணுவ வீரர்களை யோகி ஆதித்யநாத்’ மோடியின் சேனை’ என குறிப்பிட்டுள்ளர்.  மோடி முதல் முறை வாக்களிப்பவர்கள் பாலகோட் தாக்குதல் செய்த வீரர்களுக்காகவும் புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த தியாகிகளுக்காகவும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.  இவ்வாறு ராணுவ வீரர்கள் பெயரால் வாக்கு கேட்க இவருக்கு வெட்கமாக இல்லையா?” என கேள்விகள் எழுப்பினார்.