ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு: ஓபிஎஸ், ஸ்டாலின், டிடிவி இரங்கல்…

சென்னை:

ராஜ்டிவி ஊடகத்துறையினர் மூத்த  ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளது ஊடகத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஓபிஎஸ்:

தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும்  அளிக்கிறது. அவர்களது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம்  குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  பொதுப்பணியில் ஈடுபடும் ஊடகத்துறை நண்பர்கள்மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது டிவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ள,

மூத்த ஒளிப்பதிவாளர் @RajtvNetwork வேல்முருகன் #Covid19-ல் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்! முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும்.

டிடிவி தினகரன்:

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரேனாவால் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஊடகத்துறையின்ர் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதுடன், உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனாவால் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சுகாதாரத்துறை செயலாளர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

You may have missed