பெரம்பலூர் ஆ.ராசா அலுவலகம் முன்பு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

டில்லி,

டந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும்  விடுவிக்கப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் திமுகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள ஆ.ராஜாவின் அலுவலகத்தில்  அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.