ராஜமௌலி

பெங்களூரு:

பாகுபலி-2  படம் கர்நாடகாவில் வெளியிட கன்னட வெறியர் வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் எதிர்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்றது.

பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரமான கட்டப்பாக கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கி றார். இந்நிலையில், ஏற்கனவே 9 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சத்யராஜ் காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக பேசியதாக கூறி வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் பாகுபலி படத்தை தடை செய்வதாக அறிவித்தனர்.

மேலும் நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.

இதன் காரணமாக பாகுபலி தயாரிப்பாளர் ராஜமவுளி அழாத குறையதாக கன்னட வெறியர்களி டமும் கெஞ்சி வீடியோ பதிவு வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜும், மன்னிப்பு கோருவதாக ஒரு வீடியோ அறிக்கை  வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, பாகுபலியை எதிர்த்து நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் பாகுபலி படம் வெளியாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தயாரிப்பாளர் ராஜமவுளி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.