இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , விஷால், அமிதாப் பச்சன் , அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

இதனிடையே ஜூலை 29-ம் தேதி ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார் ராஜமெளலி. இன்று (ஆகஸ்ட் 12) 14 நாட்கள் தனிமை முடிந்து, கொரோனா அச்சுறுத்தலிலிருந்து முழுமையாகக் குணமாகியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ராஜமெளலி

“இரண்டு வாரத் தனிமைக் காலத்தை முடித்துவிட்டேன். எந்த அறிகுறிகளும் இல்லை. பரிசோதனை எடுக்க வேண்டுமே என்று எடுத்தேன். எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. ப்ளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடீஸ் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா என்பதைப் பார்க்க மருத்துவர் எங்களை 3 வாரங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்” என பதிவிட்டுள்ளார் .