‘ஆகாஷவாணி’ படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிய ராஜமெளலி மகன்….!

--

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமெளலி. இவருடைய மகன் கார்த்திகேயா. ‘பாகுபலி’ படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றியவர்.

அதனைத் தொடர்ந்து ‘ஆகாஷவாணி’ என்று பெயரிடப்பட்ட புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

இதனிடையே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் கார்த்திகேயா.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ஆகாஷவாணி’ படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. ஒரு அற்புதமான படக்குழுவுடன் திரைப்படம் சிறப்பாக முன்னேறி வந்துள்ளது. ஆனால் நாள் ஆக ஆக இயக்குநரின் பார்வையும், எனது பார்வையும் வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம்.

எனவே இயக்குநரின் அந்தப் பார்வைக்கு ஒத்துப்போகும் ஒருவரிடம் இந்தப் படத்தை ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே ஏயு அண்ட் ஐ ஸ்டுடியோஸின் ஏ பத்மநாப ரெட்டியிடம் படத்தை ஒப்படைக்கிறேன்.இதுவரை இந்தப் படத்தில் பங்கு கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி என கூறியுள்ளார் .