ராஜமவுலியின் அடுத்த படம் இன்று தொடங்கியது

தராபாத்

பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமவுலின் அடுத்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

கடந்த வருடம் வசூலில் சாதனை படைத்த பாகுபலி 2 மற்றும் பாகுபலி1 ஆகிய படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. இவ்விரு படங்களும் சுமார் ரூ 400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை புரிந்தது.

தன்னுடைய அடுத்த படத்தை ராஜமவுலி இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளர். இந்தப் படத்த்ல் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிக்கின்றனர். இந்தப் படத்டுக்கு சுமார் 300 கோடி ரூஉபாய் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர் பெயர் ஆங்கில எழுத்தான ஆர் என ஆரம்பிப்பதால் படத்தின் பெயர் தற்போது ஆர் ஆர் ஆர் என வைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த பட ஆரம்ப பூஜையின் போது சிரஞ்சீவி கலந்துக் கொண்டு முதல் ஷாட்டை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்த விழாவுக்கு பாகுபலி கதாநாயகர்களான பிரபாஸ் மற்றும் ராணா வந்திருந்தனர். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளிவரும் என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி