‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் உட்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

RRR என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படமாக, 1920-களில் காலக்கட்டத்தில் நடக்கும் கற்பனை கதையாக உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.