டில்லி:

ரசு கையகப்படுத்தி உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக் கட்டண விவகாரம் தொடர்பான வழக்கில், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய கட்டணத்தையே  செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை  3 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

‘தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து,  அங்கு படிக்கும்  189 மாணவர்கள் சென்னை  உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணை கடந்த அண்டு  உச்சநீதி மன்ற  நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, இதுகுறித்து, தமிழக அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணய குழு ஆராய்ந்து, 2018ம் ஆண்டு  ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கல்வி கட்டணத்தை முடிவு செய்து அன்றே வெளியிட வேண்டும் என அறிவித்து.

அதையடுத்து, . ஏற்கனவே கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, மனு மீதான விசாரணை   நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதையடுத்து, ஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்,  அரசு உதவி பெறாத மருத்துவ கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தையே  2018-19 கல்வி ஆண்டுக்கு செலுத்தி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்தி வைத்தது.