குடும்பத்தை பிரிக்கிறார் !: அதிமுக எம்.எல்.ஏ. மீது பகீர் புகார்!

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இது புகார் படலம் போலிருக்கிறது.  சமீபத்தில் அ.தி.மு..க.வில் இருந்து நீக்கப்பட்ட ராரரஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது மோசடி, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. திரைப்பட நடிகை ராதா, அதி.மு.க. பிரமுகர் விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது.  திருப்பூர் அதிமுக எம்.பி. சத்தியபாமா மீது, அவரது கணர் பகீர் குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கிறார்.

இந்த நிலையில்  அதிமுகவைச் சேர்ந்த, மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா மீது, “என் கணவரை பிரித்துவைக்க உதவுகிறார்” என்று குற்றம்சாட்டி போராடி வருகிறார் இளம் தாய் ஒருவர்.

அந்த இளம் தாயின் பெயர் ஜெனிபா ராணி. இவருடைய கணவர் சிவசங்கர். இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கடந்து விட்டது.  இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறார்.

பணி காரணமாக அமெரிக்கா சென்ற சிவசங்கரன், அங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டாராம். இந்த நிலையில், சிவசங்கரனின் பெற்றோர், ஜெனிபா ராணியிடம், “என் மகன் வேறு திருமணம் செய்துகொண்டதால், நீ விடுதலை பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிடு” என்று டார்ச்சர் செய்கிறார்களாம்.

மகனுடன் போராடும் ஜெனிபா ராணி
மகனுடன் போராடும் ஜெனிபா ராணி

இதை எதிர்த்தும், தனது கணவன் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரியும் ஜெனிபா ராணி, தனது மகனுடன்… மாமனார் வீட்டிற்கு எதிரே அமர்ந்து வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தி வருகிறார்.

இன்று அவர் செய்தியாளர்களிடம், “என் கணவர் என்னையும் என் மகனையும் தவிக்க விட்டு அமெரிக்காவில்  இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சட்டப்படி அது தவறு. அவர் இந்தியா வந்து எங்களுடன் வாழ வேண்டும்.

இது பற்றி பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவல்லை.   எனது கணவரின் நெருங்கிய உறவினர்தான்,  மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா.  ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்கிற கோதாவில், எனது புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் போலீஸை தடுத்துவிடுகிறார்” என்று குற்றம் சாட்டினார் ஜெனிபா ராணி.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

மேலும் அவர், “ஒரு குடும்பத்தைக் கெடுக்கத்தான், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜன் செல்லப்பா பயன்படுத்த வேண்டுமா. பெண்களின் காவல் தெய்வமான முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இப்படி ஒரு எம்.எல்.ஏ., அதுவும் அம்மாவின் கட்சியில் இருக்கிறார் என்பது மிக வருத்தமாக இருக்கிறது. முதல்வர் அம்மாதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று ஜெனிபர் ராணி தெரிவித்தார்.

இனியும் அவர் எனது  யும் தடுத்து விடுகின்றனர். என் கணவரையும் பார்க்க முடிய வில்லை ராஜன் செல்லப்பா செல்வாக்கு ஒரு குடும்பத்தை  கெடுக்கத்தான் பயன் பட வேண்டுமா என ஆவேசமாக ஜெனிபர் கேட்டார்.

இது குறித்து ராஜன் செல்லப்பாவிடம் கேட்டபோது, “அந்த பெண்ணின் பிரச்சினை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எதற்காக என் பெயரை இழுக்கிறார் என்று தெரியில்லை” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed