பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…! ரணில் நாளை பதவி ஏற்பு?

கொழும்பு:

லங்கை அதிபர் சிறிசேனாவில், பிரதமராக அதிரடியாக நியமனம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சே, இலங்கை உச்சநீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு காரணமாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து,  ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நாளை மீண்டும் பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் நீடித்து வரும் உள் நாட்டு குழப்பம் காரணமாக, ரணிலை பதவி நீக்கம் செய்து, பிரதமராக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார். ஆனால், ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையிலும், உச்சநீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு காரணமாகவும், அவர் செயல்பட முடியாத சூழல் உருவானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜபக்சே, தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும்  நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  இலங்கையில் கடந்த 50 நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைக்க உத்தரவிட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காரணமாக அவர் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய நிலை அதிபர் சிறிசேனாவுக்கு  ஏற்பட்டது.

ஆனால்,  ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க போவதில்லை என்று சிறிசேனா மீண்டும் பிடிவாதமாக மறுத்துவந்த நிலையில்,  ல் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை காலை 10.30 மணிக்கு ரணில்விக்ரமசிங்கே 5-வது முறையாக இலங்கை பிரதமராக ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்கிறார். இதை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த எம்.பி.யான ரஜிதசேனரத்னே தெரிவித்துள்ளார்.