டில்லி:

ந்தியாவை துண்டாட நினைத்த விடுதலைப்புலிகள் (எல்டிடிஇ) மற்றும் பாகிஸ்தான் சதி வலையில் இருந்து, இந்தியாவை  ராஜபக்சே  காப்பாற்றினார்  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டிவிட் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி பல ஆண்டுகாலமாக போராடி வந்த எல்டிடிஇ எனப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை, இந்திய அரசின் உதவியோடு, அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே அடியோடு ஒழித்தார்.  இந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை தீவிரமாக ஆதரித்து வரும், சுப்பிரமணியசாமி. அவர் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாகே அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

தற்போது, ராஜபக்சே குறித்து டிவிட் பதிவிட்டுள்ள சு.சாமி, இந்தியாவை காப்பாற்றியதே ராஜபக்சேதான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு உள்ளார். இது பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  எனது நண்பர்  முன்னாள் இலங்கை அதிபர் ஜனாதிபதி ராஜபக்சேஷவிடம் எனக்கு சமீபத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 17/9 அன்று அவரது மகனின் திருமணத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இந்தியாவை துண்டாட நினைத்த விடுதலைப் புலிகள் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து  இந்தியாவை பாதுகாத்தவர் மகிந்த ராஜபக்சே என பதிவிட்டுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் டிவிட் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.