இலங்கை : சுதந்திர கட்சியில் இருந்து ராஜபட்சே விலகல்

கொழும்பு

லங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபட்சே விலகி உள்ளார்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி இலங்கை அதிபர் சிறிசேனா பிரதமாராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்தார். அதை ஒட்டி ராஜபட்சேவை பிரதமராக நியமித்தார். அதற்கு ரணிவ் விக்கிரமசிங்கே மற்றும் சபாநாயகர் ஜெயசூர்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என ரணில் அறிவித்தார்.

முதலில் பாராளுமன்றத்தை முடக்கிய சிறிசேனா வரும் 14 ஆம் தேதி கூட்டப்படுவதாக அறிவித்தார். ஆயினும் ராஜபட்சேவுக்கு ஆதரவு கிடைக்காதுஎன கூறப்பட்டது. அதனல் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனா ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

இந்த அதிரடி திருப்பங்களின் நடுவே மற்ற்ரி அதிரடி நடந்துள்ளது. இலங்கை சுதந்திரக் கடயின் தற்போது ஆலோசகராக மட்டுமே உல்ள ராஜபட்சே தனது ஆதர்வாளர்களான 50 பாராளுமன்ற உறுப்பினர்களுடம் கட்சியில் இருந்து விலகி உள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் இலங்கை பொதுஜன முன்னணியில் இணைகிறார்.

சின்னம் தொடர்பாக சிறிசேனாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ராஜபட்சே கட்சியை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

You may have missed