கொழும்பு:

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேச சபாக்கள் உள்ளிட்ட அமைப்பகளுக்கும் தேர்தல் நடந்தது. 1.6 கோடி பேர் வாக்களித்தனர்.

 

இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. 81 கவுன்சில்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி 51 இடங்களை கைப்பற்றியது. விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும் கைப்பற்றியது.

அதிபர் சிறிசேனவின் இலங்கை மக்கள் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.