ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கப்பாண்டியனுக்கு கொரோனா…

ராஜபாளையம்:

ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கபாண்டியனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன். ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ., ஆர்.காந்திக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளானர்.

இந்த நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில்  திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்  மகள் திருமணம்  நடைபெற்றது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மனைவி கலாவதி (46), மகன்கள் ராமர் (23), லட்சு மணன் (23) ஆகியோருக்கு கடந்த மாதம் 28ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும்  மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மூவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 16ம் தேதி எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் உள்பட குடும்பத்தினர் அனை வருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில்,  தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை  மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராம்கணேஷ் (சிவகாசி) உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, தங்கபாண்டியன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், நேற்று திமுக நடத்திய  கறுப்புக்கொடி போராட்டத்தில் தங்கபாண்டியன் எம்எல்ஏ மற்றும் பலர் கலந்துகொண்டனர். தற்போது எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  எம்.எல்.ஏ.வை சந்தித்தவர்கள் உடன் சென்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.