குழந்தைத் திருமணத்துக்கு அனுமதி அளிப்பேன் : ராஜஸ்தான் பாஜக வேட்பாளர்

சோஜத், ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தின் சோரஜ் சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் ஷோபா சவுகான தாம் வென்றால் குழந்தைத் திருமணத்தை அனுமதிப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

தேர்தல்கள் நடைபெறும் போது அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதிகள் அளிப்பது வழக்கமான ஒன்றாகும். தற்போது வாக்குறுதிகள் அளிக்கும் பல வேட்பாள்ர்கள் அது சட்டப்படி நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து சிந்திப்பதே இலை என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியா முழுவதும் உள்ள திருமண சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணும் 21 வயதுக்கு கீழ் உள்ள ஆண்களும் திருமணம் செய்துக் கொள்வது தவறாகும். அவை குழந்தைத் திருமணம் என கருதப்படுகிறது.

ஷொபா சவுகான்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சோஜத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ள ஷோபா சவுகான் என்னும் பெண் வேட்பாளர் ஐ ஏ எஸ் அதிகாரி குழந்தைத் திருமணத்துக்கு ஆதரவாக வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கைகள் இருக்காது என அவர் தனது தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் இன்னும் குழந்தைத் திருமணங்கள் ரகசியமாக நடந்து வருகிறது. அதனால் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷோபா இவ்வாறு வாக்குறுதி அளித்து தேர்தல் கூட்டத்தில் பேசி உள்ளதற்கு அங்கு கூடி உள்ளவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். ஆனால் இதை சமுக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஷோபா இவ்வாறு பேசிய வீடியோ மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே வீடியோ தேர்தல் ஆணையருக்கும் புகாராக அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி இது குறித்து விசாரித்து வருவதாகவும் வீடியோவில் உள்ளது உண்மை என கண்டறியப்பட்டால் ஷோபா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.