இலவச கல்விக்கான பெற்றோர் ஊதிய வரம்பை உயர்த்திய ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர்

மாணவர்கள் இலவசக் கல்வி பெறப் பெற்றோரின் வருமான வரம்பு ரூ. 1 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக ராஜஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது.

கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல மாநிலங்களில் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சலுகை பெறும் குழந்தைகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் அதிக பட்சம் ரூ1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இந்த வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது   முந்தைய பாஜக அரசு ரூ. 1 லட்சமாகக் குறைத்தது.

இதனால் பல குழந்தைகளால் இலவச கல்வி பெற இயலாத நிலை ஏற்பட்டு பலரும் துயரடைந்தனர்.   ராஜஸ்தான் மாநில அமைச்சகம் இந்த வருமான உச்ச வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து மீன்சும் ரூ. 2.5 லட்சமாக உயர்த்த தீர்மானம் இயற்றியது.  இதற்கு நேற்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெகலாத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் வருமானம் குறைந்த மற்றும் வறுமையால் துயருறும் அனைத்து குடும்பத்துக் குழந்தைகளும் கல்வி கற்க முடியும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.   மேலும் அவர் இந்த புதிய உத்தரவு மூலம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பிரபல மற்றும் பெரிய தனியார்ப் பள்ளிகளில் இருந்து இலவசக் கல்வி பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி