வறட்சி நிவாரண நிதி  ரூ. 2820 கோடி தேவை : ராஜஸ்தான் அரசு கோரிக்கை

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதால் அம்மாநில அரசு ரூ.2819.58 கோடி நிவாரண நிதி தேவை என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பருவ மழை வழக்கத்தை காட்டிலும் மிகவும் குறைவாக பெய்துள்ளது.    இதனால் மாநிலத்தில் பல இடங்கள் வறண்டு போய் உள்ளன.   மாநில அரசு இந்த பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்ததை ஒட்டி மத்திய அரசின் விவசாயத்துறை இணைச் செயலர் தினேஷ் குமார் தலைமையில் ஒரு குழு ஆய்வு நடத்தியது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜஸ்தான் மாநில தலைமை செயலர் குப்தா மத்திய அரசுக் குழுவை சந்தித்து ராஜஸ்தான் மாநில வறட்சி குறித்து விவரித்துள்ளார்.  அவர் அந்த 11 பேர்  குழுவிடம், “ராஜஸ்தான் மாநிலத்தில் மழை குறைவாக பெய்ததால் பெரும்பாலான பகுதி வறண்டு போய் உள்ளது.   மாநிலத்தின் பல பகுதிகளில் மழைக்கால பயிர்கள் நாசமடைந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அந்த பகுதி மக்களுக்கு நிவாரண உதவி அளித்தாக வேண்டும்.    குறிப்பாக பார்மர், பிகனேர், ஜெய்சல்மார், ஜலோர், ஜோத்பூர், அனுமான் கர், பாலி, சுரு, மற்றும் நகவுர் ஆகிய ஒன்பது மாநிலங்கள் வறட்சியால் கடுமையாக பாதிப்பு  அடைந்துள்ளது.   வழக்கமான மழை அளவை விட இந்த வருடம் இங்கு 26.45%  மட்டுமே பெய்துள்ளது.

இங்குள்ள 5555 கிராமங்களில் உள்ள 17.95 லட்சம் விவசாயிகள் பயிர்க்ள் அழிந்ததால் கடும் இழப்பை சந்தித்துள்ள்னர்.   மொத்தத்தில் 72.50 லட்சம் பொது மக்களும் 86.59 கால்நடைகளும் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளதால் உடனடியாக நிவாரண நிதியாக ரூ. 2819.58 கோடி நிவாரண நிதியை அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.