ஜெய்ப்பூர்

சுக்காவலர்களால் கொல்லப்பட்ட பெலு கான் மற்றும் உள்ளவர்கள் மீதான  பசுக் கடத்தல் வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெலு கான் என்பவர் பால் விற்பனை செய்யும் விவசாயி ஆவார்  இவர் மற்றும்  அவரது 2 மகன்கள் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பேரோர் பகுதியில் ஒரு வாகனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கால்நடைகளை ஏற்றிச் சென்றுள்ளனர்.   அப்போது பசுக் காவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் கும்பல் ஒன்று இவர்களைத் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் பெலு கான் படுகாயம் அடைந்து ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று ஆழ்வாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.  பேரோர் பகுதி காவல்துறையினர்  பெலு கான்  மற்றும் அவர் மகன்கள் ரிஷத் மற்றும் ஆரிஃப் மீது பசுக்களைக் கொல்ல கடத்தியதாக வழக்கு தொடர்ந்தனர்.  அத்துடன் பெலு கான் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை மற்றொரு வழக்கைத் தொடர்ந்தது.

இந்நிலையில் அரசு சார்பில் பெலு கான் ஜெய்ப்பூர் மாநகராட்சியிடம் அளித்த விண்ணப்பத்தில் தாம் இரு கறவை மாடுகளைக் கன்றுடன் விலைக்கு வாங்கியதைத் தெரிவித்த விவரங்களை நீதிமன்றத்தில் அளித்தது.   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கான் முகமது இந்த வழக்கில் பெலு கான் பசுக் கடத்தல் செய்ததற்கான சரியான சான்றுகள் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்துள்ளார்.