ஜோத்பூர்

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்சிங் வழக்கில் பனியனுடன்  வழக்கறிஞர் வாதாடியதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தற்போது அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  அவசர வழக்கு விசாரணைகள் மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்து வருகின்றன. அவ்வகையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா நடத்தி வருகிறார்.  இதன் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நேற்று நடந்தது.

இந்த வழக்கில் வாதியின் சார்பாக வாதாடிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டிசில்,”வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த விசாரணையில் வாதியின் வழக்கறிஞர் பனியன் அணிந்து வாதாடி உள்ளார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக வாதாட அனுமதி அளித்த போதிலும் வழக்கறிஞர்கள் தங்கள் சீருடைகளுடன் தோன்ற வெண்டும் எஅன் உத்தரவிட்டிருந்தது.

விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தாலும் நீதிமன்ற மாண்பு மதிக்கப்பட வேண்டும்.  வழக்கறிஞர் விதிகளின்படி வழக்காடும் போது வழக்கறிஞர்கள் முழு சீருடையுடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.   வாதியின் வழக்கறிஞர் சரியான சீருடையில் இல்லாததால் இந்த வழக்கு வரும் மே மாதம் 5 ஆம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.