இது தோனியின் அணியல்ல – நம்பிக்கையுடன் போராடும் ராஜஸ்தான்

ஷார்ஜா: பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ள 224 என்ற மெகா டார்கெட்டை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்துள்ளது.

அந்த அணி 14 பந்துகளில் இன்னும் 27 ரன்களை அடிக்க வேண்டும். அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அவுட்டாக, நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தற்போது ராகுல் டவாஷியாவும், ராவின் உத்தப்பாவும் களத்தில் உள்ளனர். டவாஷியா தற்போது வரை 6 சிக்ஸர்களுடன் 47 ரன்களை 29 பந்துகளில் விளாசியுள்ளார். ராஜஸ்தான் அணி எப்படியும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.