பாஜகவில் இருந்து விலகிய ராஜஸ்தான் அமைச்சர்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சுரேந்திர கோயல் பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக வசுந்தர ராஜே பதவி வகித்து வருகிறார். அவருடைய அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக சுரேந்திர கோயல் பதவி வகித்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் பாஜகவும் தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த பட்டியலில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சுரேந்திர கோயலில் பெயர் இடம் பெறாததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதை ஒட்டி ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன்லால் சைனியிடம் தாம் பாஜகவில் இருந்து முழுமையாக விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி