டெல்லியில் ‘பாசிட்டிவ்’.. ஜெய்ப்பூரில் ’நெகடிவ்’.. எம்.பி.யை குழப்பிய  கொரோனா சோதனை..

டெல்லியில் ‘பாசிட்டிவ்’.. ஜெய்ப்பூரில் ’நெகடிவ்’.. எம்.பி.யை குழப்பிய  கொரோனா சோதனை..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

அனைத்து எம்.பி.க்களுக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 12 ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று இல்லை என ’ரிசல்ட்’ வந்த எம்.பி.க்கள் மட்டுமே அவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று இருப்பதாக ‘’பாசிட்டிவ்’’ ரிசல்ட் வந்த எம்.பி.க்கள் அவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

எம்.பி.க்களுக்கு மட்டுமல்லாது மக்களவை அலுவலக  ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

டெல்லியில் இவ்வாறு பரிசோதனை நடத்தப்பட்டு, கொரோனா இருப்பதாக முடிவு செய்யப்பட்ட எம்.பி.க்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக்தந்திரிக் எம்.பி. ஹனுமான் பெனிவாலும் ஒருவர்.

கூட்டத்தொடரில் கலந்து முடியாமல் ஏமாற்றத்துடன் ஜெய்ப்பூர் சென்ற அவர், அங்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

ஆனால் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ’நெகடிவ்’ –அதாவது தொற்று இல்லை. என ரிசல்ட் வந்துள்ளது.

இதனால் எம்.பி. பெனிவால் குழப்பம் அடைந்துள்ளார்.

டெல்லி ரிசல்டையும், ஜெய்ப்பூர் ரிசல்டையும் தனது ட்விட்டரில் பதிவிட்டு, ‘’ எந்த ரிசல்ட் உண்மையானது?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

-பா.பாரதி