ஷார்ஜா: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை விளாசிவிட்டது.

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இந்த முடிவு தவறோ என்று எண்ணும் வகையில் அமைந்தது ராஜஸ்தானின் பேட்டிங்.

அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் அடிக்க, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், 32 பந்துகளை சந்தித்து, 9 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி அடித்து 74 ரன்களை குவித்துவிட்டார்.

மற்றவர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் 8 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி, 27 ரன்கள் குவித்தார்.

இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 216 ரன்களை விளாசிவிட்டது. சென்னை அணியின் சார்பில் சாம் குர்ரனுக்கு மட்டுமே 3 விக்கெட்டுகள் கிடைத்தன. லுங்கியும், பியூஷ் சாவ்லாவும் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.