Random image

ராஜஸ்தான் : 5 பியூன் வேலைக்கு 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 5 பியூன் வேலைக்கு 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அரசின் சாதனைகளை விளக்கும் பேரணியான கௌரவ் யாத்ராவில் கலந்துக் கொண்டு மாநிலம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.   அவர் அந்தப் பேரணியில் பல இடங்களில் கூட்டங்களில் பேசும் போது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு வேலை வாய்ப்பை அதிகரித்துள்ளதாக பேசி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது.  கட்னத 2013 ஆம் வருடம் தேர்தல் சமயத்தில் பாஜக 15 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறி ஆட்சியைப் பிடித்தது.  இந்த வாக்குறுதியின் காரணமாக பாஜக மொத்தமுள்ள 200 இடங்களில் 163 இடங்களில் வென்று சாதனை படைத்தது.  ஆனால் இன்று வரை பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது.

கடந்த ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில்  18 பியூன் வேலை காலியானது.   அதற்கு 13000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.   வெறும் 10 ஆம் வகுப்பு மட்டுமே கல்வி தகுதியான அந்தப்பணிக்கு 129 எஞ்சினீயர்கள், 23 வழக்கறிஞர்கள், ஒரு ஆடிட்டர். 393 முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.    இது அப்போது மிகவும் அதிர்ச்சியை அளித்த்து.

தற்போது ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் மற்றொரு துறையில் 5 பியூன் வேலைக்கு 23000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   இவர்களிலும் எஞ்சினியர்களும், முதுகலை பட்டதாரிகளும் அதிகம் உள்ளனர்.    இந்த இரு முறையும் விண்ணப்பித்தும் பணி கிடைக்காத ஒருவர் தனது சொந்த முயற்சியில் காய்கறி வியாபாரத்தை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.