ராஜஸ்தானில் பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து! 30 பேர் பலி

ஜெயப்பூர்,

ராஜஸ்தானில் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்து விழுந்தது. இதில் 30 பேர் பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

 

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்றில்   இந்த விபத்து நடந்துள்ளது.

வழக்கமான செல்லும் பேருந்து,  துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்றின் பாலத்தை கடந்துசென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் சுற்றச்சுவரை உடைந்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்தது.

இந்த பயங்கர விபத்து காரணமாக பஸ்சில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து  காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.