இரு தொழிலாளர்களை கார் ஏற்றி கொன்ற பாஜக தலைவர் மகன் கைது

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர் நகர பாஜக தலைவரின் மகன் குடிபோதையில் 2 தொழிலாளர்களை கார் ஏற்றி கொன்றுள்ளது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

பாஜகவின் விவசாய அணித் தலைவராக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பத்ரி என்பவர் பதவி வகித்து வருகிறார்.  அவருடைய மகன் பரத் பூஷன் மீனா.  சுமார் 35 வயதாகும் பரத் பூஷன் மீனா நேற்று அதிகாலை  தனது நண்பர்களுடம் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.   அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த காரை பரத் பூஷன் மீனா ஓட்டிக் கொண்டிருந்தார்.   அவர் குடிபோதையில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த நடைபாதையில் மோதி உள்ளது.   அவர் வாகனத்தை நிறுத்தாமல் மேலும் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.   அந்த கார் நடைபாதையில் படுத்திருந்த 4 பேர் மீது ஏறி அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதி மக்கள் காரை நிறுத்தி பரத் பூஷன் மீனா உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.    இந்த கார் விபத்தில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு  பேர் மரணம் அடைந்துள்ளனர்.   மற்ற இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.     காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed