உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான்….பாஜக அமைச்சர் தடாலடி

ஜெயப்பூர்:

உலகிலேயே அதிகளவில் ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான் என்று ராஜஸ்தான் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியில் தொழிலளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் ஜஸ்வந்த் சிங் யாதவ்.

குஜராத், இமாச்சல் மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து ஜஸ்வந்த் சிங் கூறுகையில், ‘‘நமது மதிப்பிற்குரிய பிரதமரும், உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த பிரதமருமான மோடி தலைமையில் பாஜக இரு மாநிலங்களில் அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றுள்ளது’’ என்றார்.

அம்மாநில ஆல்வார் மாவட்டத்தில் ஆக்ரோ டிரேட் டவரை தொடங்கி வைத்தபோது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மோடியை ஊழல் பிரதமர் என்று இவர் கூடிய வீடியோ காட்சி அதிகளவில் பரவி வருகிறது. இது மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.