ராஜஸ்தான்:

வ் ஜிகாத் எனும் பெயரில் தனிமனித திருமண சுதந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்கள் லவ் ஜிகாத் பெயரில் மதமாற்றத்தை மேற்கொள்ள திருமணங்கள் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிராக சட்டமியற்றுவதாக அறிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் லவ் ஜிகாத் என்ற சொல் பாஜகவினால் தயாரிக்கப்பட்டு தேசத்தை பிளவுபடுத்துவதற்கும் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் பயன்படுத்தப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது சுட்டுரைப் பதிவில் அவர்,“தனிமனித சுதந்திரமான திருமணத்தைத் தடுக்க ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமானது. திருமணம் என்பது தனிப்பட்ட சுதந்திரம். காதலில் ஜிகாத்துக்கு இடமில்லை.” என விமர்சித்துள்ளார்.