மும்பை:

ஜார்கண்ட் போன்ற சிறிய மாநிலத்திற்கு 5 கட்ட தேர்தலா? என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பி உள்ளார். 81 தொகுதிகள் உள்ள சிறிய மாநிலத்துக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தும்போது, மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் மட்டும் ஏன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு என்றும் வினவி உள்ளார்.

  • ஜார்கண்ட் போன்ற சிறிய மாநிலத்திற்கு 5 கட்ட தேர்தலா?
  • பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன
  • நீதித்துறை கேள்விக்குறியாகி வருகிறது
  • ஊடங்களுக்கு கடும்  அழுத்தம்
  • மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைமை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை
  • தனது முழு வலிமையுடன் காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தில் நுழைய வேண்டும்

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிரா, அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, எதிர்க்கட்சியினருக்கு பாஜக தலைமை தூண்டி வீசியதாகவும், ஆனால், பலிக்கவில்லை என்று கூறியவர், தற்போது, “தோல்வியுற்ற மனநிலையுடன் போராடாமல், முழு பலத்தோடு காங்கிரஸ் கட்சியினர்  போராட வேண்டும் என்று கூறினார்.

ஜார்க்கண்டில் ஐந்து கட்ட தேர்தல்களை நடத்துவதன் பின்னணியில் உள்ள தர்க்கத்தை கேள்விக்குட்படுத்திய கெலாட், தேர்தலில்  வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும், கறுப்புப் பணத்தைப் பயன்படுத்து வதற்கும்,  தேர்தலின்போது, தேர்தல்ஆணையம் மாநில அரசுகளுக்கு  நிதியுதவி அளிப்பதற்கான சாத்தியத்தை  ஆராய வேண்டும் என்றும் கோரினார்.

ஜார்கண்டில் தேர்தல்கள் ஐந்து கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது… ஆனால், அரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களுடன் ஜார்க்கண்ட் தேர்தல்கள் ஏன் நடத்தப்படவில்லை? இவ்வளவு சிறிய மாநிலத்தில் 5 கட்ட தேர்தல்கள்… தேர்தல் ஆணையம் மத்தியஅரசு விருப்பத்துடன் செயல்படுகிறது, அதை கேள்வி கேட்க யாரும் இல்லை என்று சாடியவர்,

நாட்டின்  அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. திட்டக் கமிஷனைப் பாருங்கள் என்று கூறியவர்,.நாட்டின் பொருளாதார நிலைமை ஆழ்ந்த கவலைக்குரியது. இதனால் “எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். வணிகங்களும் தொழில்களும் வெற்றி பெற்று வருவதாக மத்திய அரசு கூறு கிறது, ஆனால்,  ஆட்டோமொபைல் துறை, ரியல் எஸ்டேட் அல்லது சிறு வர்த்தகத்தில் இருந்தவர்கள் வேலைகளை இழந்து பெரும்சோகத்தை சந்தித்து வருகின்றனர்.

இது மக்களிடையே பெரும் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்றும் தெரிவித்தவர், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் வீதிகளில் இறங்க வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

இப்போது நீதித்துறை, வருமான வரி, ஈடி அல்லது சிபிஐ.. போன்றவை கள் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறார்கள்,  அதிகாரத்துவத்தினர் மற்றும் முகவர்கள், எப்போது வேண்டுமானாலும் மாறலாம்  என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களின் வழிகள் மாறும்….  எப்போது மாறும் என்று தெரியாது என்று குறிப்பிட்டவர், அப்போது பொதுமக்களின் மனநிலையும் மாறி தெருக்களில் இறங்கி போராடுவார்கள் என்றார்.

இப்போது நாடு ஒரு திசையில் செல்கிறது… நீதித்துறையைப் பாருங்கள். நீதித்துறை இப்படி நடந்து கொள்ளும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, ”என்று கூறியவர்,  நாட்டின் உள்ள  ஊடகங்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றம் சாட்டியவர், அதன் தலைக்கு மேல் தொங்கும் ஏஜென்சிகளால் சோதனைகள் நடக்கும் என்ற அச்சம் இருப்பதாகவும்  தெரிவித்தார்.

அரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கெலாட், இந்த தேர்தல்களில், மத்திய தலைவர்கள் பலரும் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டவர், “நாங்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் உற்சாகத்துடன் பிரசாரம்  செய்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும்,  நாங்கள் அவ்வாறு பிரச்சாரம் செய்திருந்தால், விளைவு வேறுபட்டிருக்கக்கூடும்…

இந்த விவகாரத்தில் உள்ளூர் தலைமை தேவையான தைரியத்தைக் காட்டியிருக்க வேண்டும். எங்களை அழைத்திருந்தால், நாங்கள் எங்கள் கடமையைச் செய்வோம்,  அவர்கள் எங்களை அணுகியிருக்க வேண்டும். நாங்கள் முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்தோம், நாங்கள் எங்கள் எல்லா சக்தியுடனும் போராடுவோம், ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு உதவுவோம். ஆனால், அது நடக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்.

இதுபோன்ற சூழலில்தான்   ​​மத்திய தலைமை கூட அங்கு பிரசாரத்திற்கு செல்வது கடினமாக இருந்ததாகவும் கூறினார். எப்படியும் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற என்ற சூழ்நிலை காங்கிரசாரிடையே  இருந்தது என்றும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசியவர், காங்கிரஸ் கட்சி  “தனது முழு வலிமையுடனும் தேர்தல் களத்தில் நுழைய வேண்டும்” என்றும்,  “பொது மனநிலை எப்போது மாறும் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்திரா காந்திக்கு பொது மனநிலை மாறும்போது, ​​அது (நரேந்திர) மோடியின் விஷயத்திலும் மாறலாம். ஒவ்வொரு காங்கிரஸ் ஊழியரும் தைரியம் காட்ட வேண்டும். தோல்விகளும் வெற்றிகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி.

இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.