பாஜகவின் ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளர் வசுந்தர ராஜே : அமித்ஷா

--

ஜெய்ப்பூர்

ந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் அமித்ஷா பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வசுந்தர ராஜேவை அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதை ஒட்டி ராஜஸ்தானை ஆளும் பாஜகவின் இரு நாள் மாநில செயற்குழு கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.   அதன் நிறைவு நாளான நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

தனது உரையில் அமித்ஷா “வரப்போகும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்   இந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளர் வசுந்தர ராஜே தலைமையில் பாஜக களமிறங்க உள்ளது.   அதே போல் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.

அத்துடன் வரவிருக்கும் 2019 பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூட  வேண்டும்.  அதற்காக பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து பணி ஆற்ற வேண்டும்.   அதன் மூலம் பாஜகவுக்கு வெற்றியை அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.