ராஜஸ்தான் : பெட்ரோல் டீசல் வரி 4% குறைப்பு
ஜெய்ப்பூர்
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள வாட் வரியில் ராஜஸ்தான் முதல்வர் 4% குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தால் ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை இந்த விலைகள் எட்டுகின்றன. . மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் நாடெங்கும் முழு அடைப்பு போராட்டத்துக்குஅழைப்பு விடுத்துள்ளது
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தர ராஜே தற்போது அரசின் சாதனை விளக்க பேரணியில் கலந்துக் கொண்டு வருகிறார் கௌரவ் யாத்திரா என பெயரிடப்பட்ட இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக ரௌத்சார் பகுதியில் நேற்று ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது அவர், “பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் விவசாயிகல் உள்ளிட்ட பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு பெட்ரோலுக்கான வாட் வரியில் 4% குறைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஓரளவு குறையும்” என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் படி ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கபடும் 30% வாட் வரி இனி 26% ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள 22% வாட் வரி இனி 18% ஆகி உள்ளது. இதனால் லிட்டருக்கு ரூ. 2.50 வரை குறைகிறது.