ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம், முதல்வர் அஷோக் கெலாட் மூன்றாவது திட்டத்தை(முன்மொழிவு) அனுப்பியுள்ளார். ஜூலை 23ம் தேதியிலிருந்து இது மூன்றாவது முன்மொழிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்மொழிவு வழங்கப்படுவதற்கு முந்தைய நாளில், அரசுக்கு, பின்பற்றும் வகையிலான 3 ஆலோசனைகளை வழங்கியிருந்தார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைகளில், சட்டசபையைக் கூட்டும் முன்னதாக, குறிப்பிட்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு 21 நாள் நோட்டீஸ் வழங்குவதும் அதில் அடக்கம்.
இந்நிலையில், சட்டசபையைக் கூட்டுவதற்கு ஆளுநர் சம்மதிப்பார் என்றும், அதற்கான தேதியை அறிவிப்பார் என்றும் நம்புவதாக அம்மாநில அமைச்சர் பிரதாப் கச்சாரியவாஸ் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், ஆளுநருக்கு அனுப்பியுள்ள முன்மொழிவில், ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சபையைக் கூட்டுவதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.