ராஜஸ்தான் முதல்வரின் இரண்டாம் நாள் அதிரடி : 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெகலாத் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதை ஒட்டி காங்கிரஸ் தலைவர் அசோக் கெகலாத் முதல்வராக நேற்று முன் தினம் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற இரண்டாம் நாளான நேற்று பல ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நிதித்துறை செயலராக இருந்த அஜிதாப் சர்மா முதல்வரின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஆஜ்மீர் ஆட்சியர் ஆர்த்தி தோக்ரா மற்றும் தேசிய சுகாதார குழ் தலைவர் ராஜன் விஷால் ஆகியோர் முதல்வரின் இணை செயலர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரைத் தவிர மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளும் முதல்வரின் இணை செயலர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர தொழில் துறை, உள்துறை, பழங்குடியினர் நலத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகளில் இருந்து அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 40 அதிகாரிகளை முதல்வர் அசோக் கெகலாத் ஒரே நாளில் இடமாற்றம் செய்துள்ளார்.

You may have missed