ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசு ரூ.3500 கோடி மதிப்பிலான யுனிவர்சல் ஹெல்த்கேர் திட்டத்தை அறிவித்துள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

அம்மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநில சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தாண்டு முதல், அம்மாநில குடிமக்கள் ஒவ்வொருவரும், இத்திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது, “நாட்டிலேயே முதன்முறையாக, ராஜஸ்தானில்தான் யுனிவர்சல் ஹெல்த் கவரேஸ் திட்டம் ரூ.3500 கோடியில் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா, சபையில் விரைவில் நிறைவேற்றப்படும்.

மேலும், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அடுத்தாண்டு முதல், விவசாயத்திற்கென தனி பட்ஜெட், சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்” என்றார் அசோக் கெலாட்.